search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி தைப்பூசத்திருவிழா"

    பழனி தைப்பூசத்திருவிழாவில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் வருகிற 19 ந்தேதி காலை முதல் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
    பழனி:

    பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 20-ந்தேதி திருக்கல்யாணமும், வெள்ளி ரதப்புறப்பாடும் அன்று இரவு 9.30 மணிக்கு வெள்ளித்தேரோட்டமும் நடைபெறுகிறது.

    வருகிற 21 -ந்தேதி தைப்பூசத்திருவிழா அன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தைப்பூசத்திருவிழாவில் முருகனை தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரையாக வருகை தருகிறார்கள்.

    பக்தர்கள் பாதுகாப்பு பணிக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஜ.ஜி ஜோஷிநிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திவேல்(திண்டுக்கல்), பாஸ்கரன்(தேனி) , ஆகியோர் தலைமையில் 39 போலீஸ் டி.எஸ்.பி.க்கள், 84 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 1700 ஆண் காவலர்கள், 225 பெண் காவலர்கள், 700 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 540 ஆயுதப்படை போலீசார், 400 போக்குவரத்து போலீசார், 50 குற்றப்பிரிவு சிறப்பு போலீசார், 50 வெடிகுண்டு ஆய்வு போலீசார் மற்றும் வீடியோ ஆய்வாளர்கள் 15 பேர், ஊர்காவல் படையினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் வருகிற 19 ந்தேதி காலை முதல் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    ×